ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திட்டம்

ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திட்டம்: E V R Maniammaiyar Ninaivu Poor Widow Daughter Marriage Assistance Scheme

ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திட்டம்
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திட்டம்

திட்டத்தின் நோக்கம்

 

ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்.

 

வழங்கப்படும் உதவி

 

  1. திட்டம் 1: ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்
  2. திட்டம் 2: ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.

 

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

 

திட்டம் 1

1. கல்வித் தகுதி தேவை இல்லை.

 

திட்டம் 2

 

  1. பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
  2. பட்டயப் படிப்பு (Diploma Holders) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

 

பொது

 

  1. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
  3. திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

 

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

 

  1. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு விதவைச் சான்று, வருமானச் சான்று தேவையில்லை.
  2. விதவை உதவித் தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச் சான்று மற்றும் வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்க வேண்டும்
  3. விதவையர் மகளின் வயது சான்றிதழ்.

 

திட்டம் 2

 

1. பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக் கல்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்குனரசத்தால் அங்கீகரிக்கப்பட்டகல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

 

  1. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
  2. சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்,

 

தொடர்பு அலுவலரின் பதவி: மாவட்ட சமூகநல அலுவலர்கள்

 

Detailed Notification Link – CLICK HERE

The post ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திட்டம் appeared first on GOVERNMENT JOB LIVE.



Category : governmentjoblive

Comments

Popular posts from this blog

SHS Bihar CHO Previous Year Papers 2020 – SHSB Community Health Officer Sample Papers PDF

Assam Forest Guard Previous Year Paper 2020 – SLPRB Assam Police Old Question Papers

राजस्थान जन सूचना पोर्टल 2020 jansoochna.rajasthan.gov.in पर करे शिकायत, पंजीकरण और सुचना ले